ராதாரவி நல்லவரா? என் டிரஸ்க்குள் கைவிட்டு அசிங்கப்படுத்தி.. டப்பிங் ஆர்டிஸ்ட் வேதனை!

Tamil Cinema Radha Ravi
By Sumathi Mar 16, 2024 08:18 AM GMT
Report

ராதாரவி குறித்து டப்பிங் ஆர்டிஸ்ட் வேதனை தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை 

டப்பிங் கலைஞர் சங்கீதா சமீபத்திய பேட்டி ஒன்றில், 2017 ஆம் ஆண்டு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் ஒருவரால் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை ஏற்பட்டது. இதுகுறித்து டப்பிங் யூனியன் செயலாளரிடம் புகார் தெரிவித்தேன்.

radha ravi

ஆனால் அவரோ எனக்கு போன் செய்து, சங்கீதா நான் அந்த நபரிடம் பேசிவிட்டேன். இனி அவர் உங்களை டப்பிங்கிற்கு அழைக்க மாட்டார், நீங்களும் போகாதீர்கள் என்றார். நீங்கள் சட்ட ரீதியிலாக சென்றால் நான் உங்களை யூனியனில் இருந்து நீக்கிவிடுவேன் என மிரட்டினார்.

பிறகு டப்பிங் யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்ட சின்மயி உள்ளிட்டோர் இருந்த குழு சார்பில் நான் ராதாரவியை எதிர்த்து டப்பிங் யூனியன் சங்கத் தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது டப்பிங் யூனியனில் ஒரு மீட்டிங் நடந்தது. அதற்கு நான் சென்றேன். அப்போது ராதாரவி, அந்த பெண்ணை அடிங்க எனக் கூறினார்.

கணவரை கூட்டிட்டு வராதே.. தொல்லை - ராஜலட்சுமியை கலாய்த்த ராதாரவி!

கணவரை கூட்டிட்டு வராதே.. தொல்லை - ராஜலட்சுமியை கலாய்த்த ராதாரவி!

சங்கீதா வேதனை

உடனே, அந்த டப்பிங் யூனியன் செயலாளரின் தங்கை கவிதா, என்னை அசிங்கமாக பேசி, என் ஆடைக்குள் கையை விட்டு நகங்களால் கீறி என்னை மிகவும் டார்ச்சர் செய்தார். நான் எழுந்திருக்காமல் இருக்க சில பெண்கள் என்னை அப்படியே அழுத்தி பிடித்துக் கொண்டனர்.

dubbing artist sangeetha

நான் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ராதாரவி நல்லவர் கிடையாது. யூடியூபில் இதுவரை எந்த பெண்ணையாவது நன்றாக பேசியுள்ளாரா, நயன்தாராவை அவர் என்ன பேசினார், அவரை எதற்காக திமுகவிலிருந்து நீக்கினார்கள். எனவே அவரே நல்லவர் இல்லாத போது அவர் எப்படி அநியாயத்தை தட்டி கேட்பார் என வேதனை தெரிவித்துள்ளார்.