கணவரை கூட்டிட்டு வராதே.. தொல்லை - ராஜலட்சுமியை கலாய்த்த ராதாரவி!

Tamil Cinema Super Singer Radha Ravi
By Sumathi Dec 13, 2022 04:30 PM GMT
Report

ராஜலெட்சுமி போட்டோவை போட்டால் வியாபாரம் ஆகிவிடுமா என ராதாரவி கலாய்த்துள்ளார்.

லைசென்ஸ்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செந்தில் கணேஷ் ராஜலட்சுமி ஜோடி தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், ராஜலட்சுமி நடிப்பில் தயாராகி வரும் லைசென்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கணவரை கூட்டிட்டு வராதே.. தொல்லை - ராஜலட்சுமியை கலாய்த்த ராதாரவி! | Radharavi Speech About Super Shinger Rajalakshmi

இந்த படத்தை கணபதி பாலமுருகன் இயக்கியுள்ளார். இதில் ராதாரவி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதன் போஸ்டர் வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராதாரவி, இந்த படத்தின் இயக்குனரை நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன்.

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி

அவ்வளவு தைரியமாக ஒரு கதையை எடுத்து இருக்கிறார். அதுவும் இந்த கதைக்கு ராஜலட்சுமியை தேர்வு செய்திருக்கிறார். அதுதான் டாப். வேறு யாராக இருந்தாலும் வேறு நடிகைகளை தேர்வு செய்திருப்பார்கள் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஓபன் செய்தார்கள். ராஜலட்சுமி போட்டோவை போட்டால் வியாபாரம் ஆகிடுமா?

கணவரை கூட்டிட்டு வராதே.. தொல்லை - ராஜலட்சுமியை கலாய்த்த ராதாரவி! | Radharavi Speech About Super Shinger Rajalakshmi

ரஜினி சார் முகத்தை போட்டாலே இழுக்குது ஆனால் ராஜலட்சுமி முகத்தை தைரியமாக போட்டிருக்கிறதார்கள். அதை பாராட்டுகிறேன். இந்த கதைக்கு ஏற்ற ஒரு அற்புதமான கதாநாயகி குத்து விளக்கு ஏற்றிய போது கூட அவரது கணவரை அழைத்தார்.

இது முதல் படம் அம்மா. அடுத்த படத்திற்கெல்லம் அவரை கூப்பிட்டுக்கொண்டு வராதே. தொல்லை. உன் கணவரை அழைத்து வந்தால் பாதுகாப்பு என்று நீ நினைக்கிறாய். ஆனால் நீதான் உன்னுடைய பாதுகாப்பு என்று கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.