இன்ஸ்டகிராம் மூலம் கணவரை விவாகரத்து செய்த இளவரசி - என்ன காரணம்?

Dubai United Arab Emirates Divorce World
By Jiyath Jul 18, 2024 07:52 AM GMT
Report

துபாய் இளவரசி 'ஷேக்கா மஹ்ரா' தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

துபாய் இளவரசி

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூம். இவரது இளைய மகள் 'ஷேக்கா மஹ்ரா' துபாய் இளவரசி என்று அழைக்கப்படுகிறார்.

இன்ஸ்டகிராம் மூலம் கணவரை விவாகரத்து செய்த இளவரசி - என்ன காரணம்? | Dubai Princess Sheikha Mahra Divorce

இவருக்கும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஷேக் மனா பின் முகமது என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. மேலும், இந்த தம்பதியினருக்கு கடந்த 2 மே மாதம் குழந்தை பிறந்தது. இந்நிலையில் துபாய் இளவரசி மஹ்ரா, தனது கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராமில் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நிறைவேறிய கனவு - 7 உலக அதிசயங்களை 7 நாட்களில் பார்வையிட்டு சாதனை!

நிறைவேறிய கனவு - 7 உலக அதிசயங்களை 7 நாட்களில் பார்வையிட்டு சாதனை!

விவாகரத்து 

அந்த பதிவில் "அன்பிற்குரிய கணவரே, நீங்கள் பிறருடன் நேரம் செலவிட்டு வருவதால், நான் விவாகரத்தை அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன்.

இன்ஸ்டகிராம் மூலம் கணவரை விவாகரத்து செய்த இளவரசி - என்ன காரணம்? | Dubai Princess Sheikha Mahra Divorce

உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி" என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவெளியில் இளவரசி ஷேக்கா மஹ்ரா விவாகரத்தை அறிவித்தது துபாயில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .