லொகேஷன், பாஸ்வேர்ட் பகிரணும்; ஆண் நட்பு கூடாது - கோடீஸ்வர கணவர் மனைவிக்கு போட்ட கண்டிஷன்
பெண் தனது கணவர் விதித்துள்ள கண்டிஷன்கள் என்று ஒரு லிஸ்டை பகிர்ந்துள்ளார்.
கோடீஸ்வர கணவர்
துபாயைச் சேர்ந்தவர் சவுதி அல் நடக்(26). இந்தப் பெண் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது கோடீஸ்வர கணவர் விதித்துள்ள கண்டிஷன்களை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் எப்போதும் அணியும் ஹேண்ட் பேக்கும் காலணியும் எப்போதும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும். எல்லா செலவுகளையும் எனது கணவரே பார்த்துக் கொள்வார். இதனால் என்னை வேலை செய்ய அனுமதிக்கவே மாட்டார்.
கண்டிஷன்கள்
நான் எப்போதும் சமைக்கத் தேவையில்லை. இதனால் தினமும் வெளியே தான் சாப்பிடுவோம். எப்போதும் வெளியே செல்லும் போது மேக் அப் மற்றும் தலைமுடியை அழகாக வைத்திருக்க வேண்டும். எந்தவொரு ஆண்களுடன் நட்பு இருக்கக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை குவித்து வருகின்றனர். முன்னதாக, இந்த பெண்ணுக்கு ஆறு வயது இருக்கும் போது, அவரது பெற்றோர் துபாய்க்குக் குடியேறினர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது ஜமால் அல் நடக்கை சந்தித்துள்ளார்.
இருவரும் காதலித்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளனர். அப்போதே கணவருக்கு எந்தவொரு பெண் தோழியும் இருக்கக்கூடாது. இருவரும் தங்களின் அனைத்து பாஸ்வேர்ட், லொகேஷனை மற்றவருக்குப் பகிர வேண்டும் என என கண்டிஷன் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
பிரதேச சபை பெண் உறுப்பினர்களை தாக்கும் பாணியில் சென்ற அர்ச்சுனா : வேடிக்கை பார்த்த காவல்துறை IBC Tamil