வித்தியாசமான இப்தார் நிகழ்ச்சி; விமான ஓடுபாதையில் நோம்பு திறப்பு - எங்கு நடந்தது?
உலகில் முதல் முறையாக விமான நிலையத்தின் ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இப்தார் நிகழ்ச்சி
ரமலான் நோன்பையொட்டி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நோன்பு திறக்கும் நேரத்தில் இஃப்தார் எனும் நிகழ்ச்சியானது பள்ளிவாசல்கள், வேலை செய்யும் இடங்கள் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்படும்.
இதன் மூலம்,நோம்பு மேற்கொள்பவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து அவர்களுக்கு உணவுகள் வழங்கப்படும்.
இந்நிலையில், துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் உலகில் முதல் முறையாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
எங்கு நடந்தது?
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு நோன்பு திறப்பில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்றவர்களுக்கு பேரீச்சம்பழம், பழச்சாறு, பிரியாணி உள்ளிட்ட உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இது குறித்து, துபாய் விமான நிலைய அதிகாரி பேசியபோது, “துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கடுமையான பணிகளுக்கிடையிலும் இது போன்ற நிகழ்வு மன இறுக்கத்தை போக்கும் வகையில் உள்ளதாக இருந்தது. மேலும், தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்