புகார் கொடுக்க வந்த பெண்; கழிவறைக்கு அழைத்து சென்று DSP செய்த காரியம் - அதிர்ச்சி சம்பவம்!
புகார் கொடுக்க வந்த பெண்ணைக் காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் துமகுரு மாவட்டம் மதுகிரி பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ராமச்சந்திரப்பா பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் பாவகடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நிலத் தகராறு தொடர்பாகத் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது டி.எஸ்.பி ராமச்சந்திரப்பா அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு அலுவலக கழிவறைக்கு அருகில் உள்ள இடத்திற்குச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவத்தை அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் கேமராவில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.இதனையடுத்து டிஎஸ்பி ராமச்சந்திரப்பா தலைமறைவானர்.
இது குறித்து அவர் மீது மதுகிரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே இதுபோன்ற கொடுமைகளைச் செய்வதைப் பலரும் கண்டித்து வருகின்றனர்.