குடிபோதையில் தவறி விழுந்து சுவர்களுக்கு இடையே சிக்கிய நபர் - அடுத்து நேர்ந்த சோகம்!
நபர் ஒருவர் மாடியிலிருந்து தவறி விழுந்து 2 வீடுகளின் சுவர்களுக்கு இடையே சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கிய நபர்
புதுச்சேரி மாநிலத்த்திற்கு உட்பட்ட ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (38). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து, அவரது வீட்டின் சுவருக்கும், பக்கத்து வீட்டு சுவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டார். இந்நிலையில் நேற்று காலை பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றபோது சிவசுப்பிரமணியன் சிக்கியிருப்பது தெரியவந்தது.
உயிரிழப்பு
உடனே அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 1 மணி நேரத்திற்கு பிறகு அவரை மீட்டனர்.
இதையடுத்து சிவசுப்பிரமணியனை ஏனாம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஏனாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.