புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடனமாடிய ஆளுநர் தமிழிசை
ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் கலந்துகொண்டு ஆளுநர் தமிழிசை நடனம் ஆடினார்.
ஆளுநர் மாளிகை
புதுச்சேரியில், தேசிய ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் விதமாக, அங்கு வாழும் குஜராத்தி மற்றும் மராத்தி சமூகத்தினர் தங்கள் கலாச்சார உடையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டனர். இதில் மராத்தி பாரம்பரிய-கலாச்சாரப் பாடல்கள், குஜராத்தி 'தாண்டியா' மற்றும் 'கார்பா' நடனங்கள் நடைபெற்றது.
அதில் ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார், அங்கு நடனம் ஆடி கொண்டிருந்தவர்கள், இவரை தங்களுடன் ஆடும் படி கேட்டுக்கொண்டனர். அதனால் அதனை ஏற்றுக்கொண்டு தாண்டியா நடனம் ஆடினார்.
தமிழிசை பேசியது
இதனை தொடர்ந்து, அவர் "மதம், மொழி, கலாச்சாரம் என வேறுபட்டாலும் நாம் அனைவரும் இந்தியர்களே. அரசியலுக்காக எந்த வேற்றுமையும் ஏற்படுத்தாமல் தேச ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நமக்கு மொழிவாரியாகவும் ஒரு அடையாளம் இருக்கிறது. தேசம் வாரியாகவும் ஒரு அடையாளம் இருக்கிறது. அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை. இந்த அடையாளத்தை நாமெல்லாம் மேம்படுத்தி வருகிறோம்.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் சங்கமம் என்று நடத்திக் காட்டினார். இந்த சங்கமம் நாமெல்லாம் இணையானவர்கள் என்று சொல்வதற்காகத்தான்'' என்று கூறினார்.