மாமியாரை கொடூரமாக வெட்டிய மருமகன்..நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்- ஆடிப்போன போலீஸ்!
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மாமியாரை மருமகன் வெட்டி கொலை செய்துள்ளார்.
மருமகன்
வேலூர் மாவட்டம் குடியாத்தை சேர்த்தவர் வசந்தமாள்( வயது 65) இவர் தனது மகள் மஞ்சீஸ்வரி.இவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (47) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.இந்த தம்பதிகளுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சந்திரசேகர் குடிப் பழக்கத்திற்கு அடிமையானதால் மஞ்சீஸ்வரியிடம் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனையடுத்து தனது தாய் வீட்டிற்குக் குடியேறினார். தொடர்ந்து தினமும் குடித்துவிட்டு தனது மாமியார் வசந்தம்மாளிடம் சந்திரசேகர் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வந்த சந்திரசேகர் தனது மாமியார் வசந்தம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே சந்திரசேகர் ஆத்திரத்தில் தேங்காய் உரிக்கும் கத்தியை எடுத்து மாமியாரின் கை, கை விரல்கள் தலை மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
வெட்டி கொலை
இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் வசந்தமாள் சரிந்து விழுந்தார்.இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சந்திரசேகரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.