உணவு சாப்பிட மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் வெட்டி கொலை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
உணவு சாப்பிட மறுத்த மனைவியை கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை
சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருபவர் திலீப் சிங். இவரது மனைவி பார்வதி . இவர்கள் இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திலீப் சிங் போதை அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் திலீப் இரண்டாவதாகத் திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனால் பார்வதி மிகுந்த கோபத்தில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மது போதையிலிருந்த திலீப்பிற்கு தன்னுடைய இரண்டாவது மனைவி சமைத்த உணவை நள்ளிரவு நேரத்தில் கொண்டு வந்து முதல் மனைவி பார்வதியிடம் கொடுத்துச் சாப்பிடச் சொல்லிக் கொடுத்துள்ளார். ஆனால், அவர் சாப்பிடவில்லை எனத் தெரிகிறது. தொடர்ந்து பார்வதியை அவர் வற்புறுத்தியுள்ளார்.
வெட்டி கொலை
இதனால் திலீப் சிங்கிற்கும் பார்வதிக்கும் பயங்கர தகராறு ஏற்பட்டுள்ளது.ஒரு கட்டத்தில் உச்சக்கட்டம் கோபமடைந்த திலீப் சிங் கல் மற்றும் கத்தியைக் கொண்டு பார்வதியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து பார்வதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் திலீப் சிங்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.