மதுவை பிரசாதமாக அளிக்கும் கோவில் - இந்தியாவில் நீடிக்கும் மர்ம சம்பவம்!
இந்தியாவில் உள்ள கோவில் ஒன்றில் பூஜை பொருள், பிரசாதம் என எல்லாமே மதுதானாம்.
மது பிரசாதம்
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் பழங்கால கால பைரவ நாத் என்ற கோவில் ஒன்று உள்ளது. இது பத்ரசேனன் மன்னனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்கு பக்தர்கள் தங்களது அர்ச்சனை தட்டில் பூ, பழம், வெற்றிலை பாக்குடன் மது பாட்டில்களை எடுத்து செல்கிறார்கள்.

தாந்த்ரீக வழிபாட்டால் வணங்கப்படுவதால் மது வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது மிக உக்கிரமான வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. இதனால், கோவிலின் வாகன நிறுத்துமிடத்திலிருந்து கோவிலுக்கு நடக்கத் தொடங்கும்போதே, தெருவோர வியாபாரிகள் பொது இடங்களில்
விலகாத மர்மம்
உள்ளூர் மதுபானம் முதல் வெளிநாட்டு ஒயின்கள் மற்றும் விஸ்கி வரை விற்பனை செய்கின்றனர். இதில், மது பாட்டிலைத் திறந்து, பாதி உள்ளடக்கத்தை சிலையின் வாய்க்கு அருகில் வைக்கப்பட்டுள்ள தட்டில் வைக்கின்றனர். தட்டில் வைக்கப்பட்டுள்ள மது மெதுவாக குறையத் தொடங்குகிறது.

முழுவதும் காலியானதும் பூசாரி தட்டை திரும்ப எடுத்துக்கொள்கிறார். இதை மிக அருகில் இருந்து பக்தர்களால் பார்க்க முடியும். ஆனால் அந்த மது எப்படி காலியாகிறது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. இது பல நூற்றாண்டுகளாக நடந்து வகுகிறது.
மர்மமாக இருந்தும் இந்த நிகழ்ச்சி உண்மையாக நிகழ்கிறது.
மேலும், காணிக்கையாக வழங்கப்டும் மது பாட்டில்களில் எஞ்சியிருப்பவை பக்தர்களுக்கு பிரசாதமாகத் திருப்பிக் கொடுக்கப்படுகிறது.