ரோட்டில் சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட இளைஞர் - பகீர்!

Tamil nadu Crime Kanyakumari
By Sumathi Dec 16, 2022 04:33 AM GMT
Report

ரோட்டில் நடந்து சென்ற பெண்ணை, இளைஞர் முத்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போதை ஆசாமி

கன்னியாகுமரி, கீரிப்பாறையில் அரசு ரப்பர் கழகம் உள்ளது. அந்தப் பகுதியில் அடிக்கடி இளைஞர்கள் மது அருந்தி தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதி வழியாக 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

ரோட்டில் சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட இளைஞர் - பகீர்! | Drunken Boy Kissed Lady Kanyakumari

அதே சமயத்தில் அந்த பகுதியில் ஜெரோல்டு என்ற இளைஞர் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார். தொடர்ந்து, நண்பர்களுக்குள் அவர்களை கடந்து செல்லும் பெண்மணியை முத்தமிட வேண்டும் என போட்டி வைக்கப்பட்டது.

பரபரப்பு

அதனால், போதையில் இருந்த ஜெராேல்டு வலுகட்டாயமாக நடுரோட்டில் சென்ற பெண்மணியை இழுத்து முத்தமிட்டு மோசமாக நடந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப்பெண் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.