ஓசில குடிச்சுட்டு வர என்கிட்ட போய் ஃபைன் கேக்குறீங்க - போலீஸிடம் ரகளையில் பெண்!
பெண் ஒருவர் குடிபோதையில் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
போதையில் பெண்
சென்னையில், போலீஸார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்து ஓட்டுரிமை கேட்டுள்ளனர். அதன்பின், குடி போதை கருவியில் பைப் பொருத்தி அவரை ஊத சொன்னபோது
அவர் ஊத மறுத்துள்ளார். அப்போது போலீசார், ஊதிவிட்டு நீங்கள் கிளம்பலாம் என்று கூறியுள்ளனர். சில முயற்சிகளுக்கு பின் அந்த பெண் சரியாக ஊதியுள்ளார். அதில் அவர் அதிகமாக மது அருந்தியிருப்பது தெரியவந்தது.
தகராறு
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து அபாரதம் விதித்துள்ளனர். அதற்கு அந்தப் பெண், நான் ஓசியில் மட்டுமே தான் குடித்து வந்தேன் தன்னிடம் பணம் இல்லை என்றும் இது போன்று நான் பலமுறை குடித்து செல்கிறேன்
ஓபனா சொல்லுது.. நான் ஓசி ல குடிக்க போனன்னு அந்த புள்ளைக்கு பைன் போட்டு இருக்காங்களே... ?pic.twitter.com/9I3svFa3nf
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 4, 2023
இன்று மட்டும் ஏன் பிடித்தீர்கள் என்று கேட்டு வாக்குவாதம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.