போதை ஏறி போச்சு .. குடிபோதையில் காவலரை தாக்கிய இளம்பெண் - வைரலாகும் வீடியோ
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வைரலாகி வருகின்றன குறிப்பாக பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் குடிபோதையில் ரகளை செய்வது , சிறுவர்கள் சிகெரெட் பிடிப்பது என அன்றாடம் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்கள் எதிர்கால தலைமுறைகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் காவல்துறை அதிகாரியை தகாத வார்த்தைகளில் திட்டியும் , முடியை பிடித்து இழுத்து எட்டி உதைக்க எத்தணிப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையில் மது விருந்து முடிந்து நள்ளிரவு வந்த ஓலா வண்டியில் இருந்த இளம்பெண்கள் சிலரை போலீசார் ரோந்து பணியின் போது மடக்கி பிடித்துள்ளனர்.
A thread of 11 videos, drunk girl abusing everyone including Police
— Kungfu Pande ??2.0 (@pb3060) June 19, 2022
Video 1 pic.twitter.com/SC4AGM7h5j
அவர்களை விசாரணை செய்த சமயத்தில் காவல்துறையினரை நோக்கி வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்த இளம்பெண் ஒருவர் தகாத வார்த்தைகளில் திட்ட துவங்குகிறார்.
போலீஸ் அதிகாரியை சீண்டியை பெண்
அதிக மது போதையில் இருந்த அந்த பெண் போலீஸ் அதிகாரியை சீண்டி அவரின் தலை முடியை பிடித்து இழுத்து, எட்டி உதைக்க முயற்சி செய்கிறார். போலீஸ்காரர் அணிந்திருந்த மாஸ்கை கழற்றி அதனை கிழிக்கவும் முயற்சிக்கிறார்.
நடு ரோட்டில் படுத்துக்கொண்டு உச்சபட்ச போதையில் இந்த பெண் செய்யும் அநாகரீகமான செயல்களை அங்கிருந்த வாகன ஓட்டுநர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர் . அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.