குடிபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கி, துப்பி கலாட்டா செய்த பெண் - பரபரப்பு!

India Telangana
By Jiyath Feb 01, 2024 07:38 AM GMT
Report

பெண் ஒருவர் குடிபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடத்துநர் மீது தாக்குதல் 

தெலுங்கானா மாநிலத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் 2 நடத்துநர்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கி, துப்பி கலாட்டா செய்த பெண் - பரபரப்பு! | Drunk Woman Attacks Rtc Conductor Telangana

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதன் அடிப்படையில் ஹயத்நகர் டெப்போ மேலாளர் ஜல்காம் விஜய், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த பெண், நடத்துநரிடம் இலவச பயண டிக்கெட் கேட்டிருக்கிறார். அப்போது ஆதார் அட்டையை காண்பிக்கும்படி நடத்துநர் கூறியதற்கு, அந்த பெண் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்திருக்கிறார்.

தள்ளுவண்டி கடைகளை அகற்றிய போலீஸ்; முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு - குவியும் பாராட்டு!

தள்ளுவண்டி கடைகளை அகற்றிய போலீஸ்; முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு - குவியும் பாராட்டு!

போலீசார் விசாரணை 

அந்த பெண் பயணி அப்போது குடிபோதையில் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து 15 ரூபாய் டிக்கெட்டுக்கு, 500 ரூபாயை அந்த பெண் கொடுத்துள்ளார்.

குடிபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கி, துப்பி கலாட்டா செய்த பெண் - பரபரப்பு! | Drunk Woman Attacks Rtc Conductor Telangana

அதற்கு சில்லரை இல்லை என கூறியதற்கு, நடத்துநரை திட்டியும், காலால் உதைத்தும், எச்சிலை துப்பியும் அந்த பெண் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனை தடுக்க முயன்ற பெண் நடத்துநர் ஒருவரையும் அந்த பெண் முடியை பிடித்து தாக்கியுள்ளார்.

இதனால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வீடியோ பதிவின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.