பணிப்பெண்ணின் விரலை கடித்த நபர் - அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Viral Video Indonesia Turkey Flight
By Sumathi Oct 18, 2022 07:14 AM GMT
Report

பயணி ஒருவர் போதையில் அங்கிருந்த பணிப்பெண் ஒருவரின் விரலை கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதை ஆசாமி 

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து, ஜகார்த்தாவுக்கு விமானம் ஒன்று சென்றது. அதில், போதையில் இருந்த பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்களுடன் சண்டையிட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பணிப்பெண்ணின் விரலை கடித்த நபர் - அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! | Drunk Passenger Bites Air Hostess Finger In Flight

அந்த வீடியோவில், போதையில் இருந்த பயணி, விமானப் பணியாளரை தாக்குகிறார். அந்த பணியாளர் தனது கையில் பயணியை பிடிக்க கைவிலங்கு ஒன்றை வைத்திருந்தார். பயணி அந்தப் பெண்ணை தாக்கியதை தொடர்ந்து, அவரும் போதை ஆசாமியை எதிர்த்து தாக்கியுள்ளார்.

கைகலப்பு சம்பவம்

இதனால், பயணிகளும், விமானப் பணியாளர்களும் அவர்களை தடுக்க முயன்றனர். அதனையடுத்து, விமானம் ஜகர்த்தாவுக்கு செல்ல சில மணிநேரங்கள் இருந்த போதிலும், உடனடியாக விமானம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தரையிறக்கப்பட்டது.

அதன்பின் நடந்த விசாரணையில், குடிபோதையில் சண்டையிட்ட நபர் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர். அவர் வேறொரு விமானத்தின் பைலட் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் விமானப் பணிப்பெண்ணின் விரலை கடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

விமானத்தில் சத்தம்போட்ட அவர் அமைதியாக இருக்கையில் அமரும்படி பணிப்பெண்கள் பலமுறை அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த தகராறு நிகழ்ந்துள்ளது