12 வயது சிறுவனை பாய்ந்து கடித்த கொடூர நாய்

Viral Video Kerala
By Nandhini Sep 13, 2022 08:18 AM GMT
Report

கேரளாவில் 12 வயது சிறுவனை ஒரு தெரு நாய் ஒன்று கடித்து குதறும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடித்து குதறிய தெரு நாய்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். 

அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று, அந்த வழியாக சைக்கிளில் வந்த நபரை அந்த தெரு நாய் கடித்து கொதறுகிறது. இதைப் பார்த்து அங்கு விளையாடிய குழந்தைகள் பயந்து ஓடினார்கள்.

அந்த நபரை விடாமல் கொடூரமாக அந்த நாய் கடித்துக் கொதறுகிறது. அதன் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் திணறுகிறார் அந்த நபர். இவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர அந்த தெருநாய் ஓடிச் சென்றது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதோ அந்த வீடியோ -    

street-dog-bite-and-growl-viral-video-kerala

கேரளாவில் சமீப காலங்களில் இதுபோன்ற எண்ணற்ற வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. தெருநாய்களின் தொல்லை கேரளாவிலும் பல உயிர்களை பறித்துள்ளது. ரேபிஸ் தடுப்பூசி ஒரு சில சந்தர்ப்பங்களில் பயனற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் மட்டும் கேரளாவில் 1 லட்சம் மனிதர்கள் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் இறப்புகள் பதிவாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.