ஓடும் அரசு பேருந்தில் டிரைவர் செய்த செயல் - கதறிய பயணிகள்
மதுபோதையில் டிரைவர் அரசு பேருந்தை ஓட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவர் அலட்சியம்
கோவை, பொள்ளாச்சியில் இருந்து ஒரு அரசு பேருந்து சுமார் 40 பயணிகளுடன் சிவகாசி புறப்பட்டது. இதில் டிரைவர் அருள்மூர்த்தி என்பவர் திடீரென்று வேகத்தை கூட்டுவதும், ஆளே இல்லாத சாலையில் ஹாரன் அடித்து கொண்டு பேருந்தை ஓட்டியுள்ளார்.
சந்தேகம் அடைந்த பயணிகள் பேருந்தை நிறுத்த சொன்னார்கள். ஆனால் ஓட்டுநர் நிறுத்தவில்லை. பின், தண்ணீர் பாட்டிலில் மது கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுமக்கள் கோரிக்கை
உடனே, கோமங்கலம் டோல்கேட் அருகில் பயணிகள் பேருந்தை நிறுத்த வைத்தனர். இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்த போலீஸார் பயணிகளை வேறு பேருந்தில் அனுப்பி வைத்தனர்.
மது போதையில் இருந்த அருள்மூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், டிரைவர் அருள் மூர்த்தி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.