ஒருவழியாக பிடிவாதத்தை விட்ட டிரம்ப்: கொரோனா நிவாரண மசோதாவில் கையெழுத்திட்டார்
கொரோனா நிவாரண மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட மறுப்பதாக செய்திகள் வெளியானது இதனால் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு ஜோ பைடனும், அமெரிக்க பத்திரிகைகளும் ட்ரம்பிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் நிவாரண உதவிகள் குறித்த மசோதாவில் சற்றுமுன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்மை பிரச்சனை உள்ளிட்டவற்றை சரி செய்வதற்காகவே இந்த மசோதாவில் கையெழுத்திடுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் வேலை இழந்த அமெரிக்க நடுத்தர மக்களுக்கு நிதி வழங்கும் இந்த மசோதாவில் கையெழுத்திட டிரம்ப் தற்போது கையெழுத்திட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.