வெட்கித் தலைகுனிய வேண்டியது முதல்வர் - எதனை சுட்டிக்காட்டுகிறார் அண்ணாமலை..?

M K Stalin Tamil nadu DMK BJP K. Annamalai
By Karthick Mar 02, 2024 02:17 AM GMT
Report

தமிழகத்தில் போதை பொருள் விவகாரத்தில் முன்னாள் திமுகவின் நிர்வாகி கைதானது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை கண்டனம்

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், தமிழகம் முழுமையாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரமாக, மாறியிருக்கிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக, நமது மாநிலத்தை மாற்றியதற்காக, திரு மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

drug-trafficking-cm-stalin-should-have-shame-bjp

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். திமுக நிர்வாகிகளின் நிறுவனங்களில் தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தி வருகிறது,

ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் - தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு?

ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் - தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு?

வாயே திறக்காமல்....

தமிழகத்துக்குக் கடத்தப்படவிருந்த ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் குஜராத் கடற்பகுதியிலும், இன்று ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள், நுண்ணறிவுத் துறையால் மதுரையிலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

drug-trafficking-cm-stalin-should-have-shame-bjp

திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்புகள் அம்பலமாகிக்கொண்டிருக்கும் வேளையில், திரு மு.க.ஸ்டாலின், இது குறித்து வாயே திறக்காமல் இருக்கிறார். இனிமேலாவது அவர் விழித்தெழுந்து நடவடிக்கை எடுப்பாரா அல்லது வழக்கம்போல மக்களின் கவனத்தை இதிலிருந்து முக்கியமற்ற பிரச்சினைகளுக்குத் திசைதிருப்ப, தனது கூட்டத்தை பயன்படுத்தப் போகிறாரா?