தடை செய்யப்பட்ட 156 மருந்துகள்...மீறினால் கடும் நடவடிக்கை - மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம்!

Tamil nadu India
By Swetha Aug 28, 2024 03:29 AM GMT
Report

தடை செய்யப்பட்ட 156 மருந்துகளை விற்றால் சட்ட நடவடிக்கை என மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது.

156 மருந்துகள்..

பிக்ஸ்ட் டோஸ் காம்பினேசன் (எப்டிசி) எனப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூல மருந்துகளின் கலவையை உள்ளடக்கிய பல்லாயிரக்கணக்கான கூட்டு மருந்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

தடை செய்யப்பட்ட 156 மருந்துகள்...மீறினால் கடும் நடவடிக்கை - மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம்! | Drug Control Directorate Warns About 156 Drugs Ban

அவற்றின் செயல்திறன், எதிர்விளைவுகள் ஆகியவற்றை மத்திய நிபுணர் குழு ஆராய்ச்சி செய்து வருகிறது. அதாவது, சளி, இருமல், சத்து மாத்திரைகள், இதயம், கல்லீரல் நலனுக்கான வைட்டமின் மருந்துகள்,

ஒவ்வாமை பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் என மொத்தம் 156 மருந்துகளால் கடும் எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. எனவே அதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்திய அரசு தடை விதித்தது.

மக்களே உஷார்..பாராசிட்டமால் உள்ளிட்ட 156 மருந்துக்கு தடை - முழு விவரம் இதோ!

மக்களே உஷார்..பாராசிட்டமால் உள்ளிட்ட 156 மருந்துக்கு தடை - முழு விவரம் இதோ!

கடும் நடவடிக்கை

இதையடுத்து, மத்திய அரசு தடை செய்துள்ள மருந்துகளை தமிழகத்தில் எந்த மருந்து கடைகளிலும் விற்பனை செய்யக்கூடாது என்றும் மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநர் பேசுகையில்,

தடை செய்யப்பட்ட 156 மருந்துகள்...மீறினால் கடும் நடவடிக்கை - மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம்! | Drug Control Directorate Warns About 156 Drugs Ban

மத்திய அரசு தடை செய்துள்ள 156 மருந்துகளை ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் யாரும் விற்பனை செய்யக்கூடாது. ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அந்த மருந்துகள் இருந்தால், அதனை திருப்பி அனுப்ப வேண்டும்.

அவர்கள் சம்பந்தப்பட்ட உற்பதியாளர்களுக்கு அனுப்பிவிடுவார்கள். பின்னர், அந்த மருந்துகள் அழிக்கப்படும். அந்த மருந்துகளை யாராவது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவித்துள்ளனர்.