online order செய்த மட்டன் பிரியாணி - வாக்குறுதியை நிறைவேற்றி அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
திமுகவினருக்கு மட்டன் பிரியாணி வழங்கினார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.+
மட்டன் பிரியாணி
முன்னதாக கோவை தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் தேர்தல் பணி ஆற்றும் திமுகவினருக்கு பிரியாணி வழங்குவதாக கோவை தொகுதியின் பொறுப்பாளரும் அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா டி.ஆர்.பி.ராஜா வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்த சூழலில், கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை வீழ்த்தி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார். அதன்படி, கோவையில் தேர்தல் பணி ஆற்றிய திமுகவினரின் முகவரிக்கு
ஆன்லைனில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து கொடுத்திருக்கிறார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. இது தொடர்பாக திமுகவினர் தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் அதை பகிர்ந்து அமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.