குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த எம்.பி ரவீந்திரநாத்..!
திரௌபதி முர்மு
சமீபத்தில் இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவி ஏற்றார். புதிய குடியரசு தலைவராக தேர்வாகியுள்ள முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா. பதவியேற்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுள்ள திரெளபதி முர்முவிற்கு அரசியல் முக்கிய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
நேரில் வாழ்த்திய எம்.பி.ரவீந்திரநாத்
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மாவட்ட எம்.பி.யுமான ரவீந்திரநாத், டெல்லியில் 15வது குடியரசுத் தலைவராகியுள்ள திரௌபதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் திரௌபதிக்கு முர்முவுக்கு நினைவுப் பரிசை வழங்கினார் ரவீந்திரநாத். இச்சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது என்று எம்.பி. ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.