நாட்டின் 15-வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார் திரௌபதி முர்மு..!
இந்தியா நாட்டின் 15-வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் திரௌபதி முர்மு.
திரௌபதி முர்மு பொறுப்பேற்றார்
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். நாட்டின் பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் குடியரசு தலைவர் மற்றும் 2-வது பெண் குடியரசு தலைவர் என்ற பெருமையை திரௌபதி முர்மு பெற்றார்.
டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் புதிய குடியரசு தலைவர் பதவியேற்பு விழா நடந்தது. திரௌபதி முர்முக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிராமணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.