பேருந்தில் உயிரிழந்த முதியவர் - நடத்துநர் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு!
பேருந்தில் இறந்த முதியவர் உடலை நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த (60) வயதான பீமா மாண்டவி தனது பேரன்களுடன் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்,உள்ள தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இரவு பீமாமாண்டவி, தனது பேரன்களுடன் விக்கிரவாண்டியில் இருந்து அரசுப் பேருந்தில் சென்னைக்குப் புறப்பட்டார்.
அப்போது பேருந்து செங்கல்பட்டு அருகே சென்று கொண்டிருந்த போது பீமா மாண்டவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார் . இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பேரன்கள், பேருந்து நடத்துநரிடம் தெரிவித்தனர். அப்போது சோதித்துப் பார்த்த போது முதியவர் பீமா மாண்டவியா உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து செங்கல்பட்டு மேம்பாலம் அருகே பேருந்தை நிறுத்திய ஓட்டுநரும், நடத்துநரும், முதியவரின் சடலத்துடன் அவரது பேரன்களையும் பேருந்திலிருந்து இறக்கிவிட்டுச் சென்றனர். நள்ளிரவு 2.20 மணிக்குச் சடலத்துடன் நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால், சாலையில் சடலத்தை வைத்துவிட்டு, புலம்பெயர் தொழிலாளர்கள் செய்வதறியாது தவித்தனர்.
அதிர்ச்சி சம்பவம்
அப்போது ரோந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதியவரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் கடந்த 6-ஆம் தேதி நடந்துள்ளது.இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது விசாரணை மேற்கொண்டனர்.
மனிதாபிமானமின்றி சடலத்துடன் பயணியை இறக்கிவிட்ட தற்காலிக ஓட்டுநர் ராம்குமாரைப் பணிநீக்கம் செய்தும், நடத்துநர் ரசூல் ரகுராமனைப் பணியிடை நீக்கம் செய்தும் விழுப்புரம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் குணசேகரன் உத்தரவிட்டார்.