திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால்..? போட்டுடைத்த திருமா

Thol. Thirumavalavan Tamil nadu DMK
By Sumathi Oct 22, 2025 04:47 PM GMT
Report

திமுக கூட்டணியில் இருப்பதால் தான் தங்கள் மீது விமர்சனங்கள் வருவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி

செங்கல்பட்டில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க.) பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

thirumavalavan

அதில், “தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேறிவிட்டால், அதன் பிறகு யாரும் நம்மைப் பற்றி விமர்சனம் செய்து பேச மாட்டார்கள். நாம் அவர்களுக்கு ஒரு இலக்காகவே இருக்க மாட்டோம். அவர்களின் வேலை முடிந்துவிடும்.

திருமா கருத்து

அவர்களின் செயல்திட்டம் நிறைவேறிவிடும். நம் மீது இத்தனை விமர்சனங்கள் வருவதற்கு காரணம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. பக்கம் போகவில்லையே, பா.ஜ.க.வோடு உறவாடவில்லையே, பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் திரும்பத் திரும்ப விமர்சனம் செய்யக் கூடிய ஆளாக திருமாவளவன் இருக்கிறாரே,

சரக்கு விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா? கொதித்த அன்புமணி

சரக்கு விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா? கொதித்த அன்புமணி

சனாதன எதிர்ப்பை உயர்த்திப் பிடிக்கிறாரே, தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக இருப்பதற்கு இவர் உற்ற துணையாக இருக்கிறாரே என்பதுதான். இதுதான் அவர்களின் உண்மையான பிரச்சினை.

தி.மு.க. கூட்டணியின் பலத்திற்காக வி.சி.க.வின் நிலைப்பாடு முக்கிய காரணமாக இருப்பதாலேயே, தங்கள் கட்சியை இலக்கு வைத்து எதிர்க்கருத்துகள் முன்வைக்கப்படுவதாக” தெரிவித்துள்ளார்.