லைசன்ஸ் வாங்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டாம் - புதிய விதி!
லைசன்ஸ் பெறுவது குறித்த புதிய விதி ஜூன் 1 முதல் அமலாகவுள்ளது.
ஓட்டுநர் உரிமம்
போக்குவரத்து விதிகளின்படி, எந்த ஒரு வாகனம் ஓட்டினாலும் ஓட்டுநர் உரிமம் கட்டாயம். தொடர்ந்து, ஓட்டுநர் உரிமம் எடுக்க ஸ்லாட் புக்கிங், டிரைவிங் டெஸ்ட், பயோமெட்ரிக் போன்றவற்றுக்கு ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டும்.
இந்நிலையில், மத்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, மத்திய, மாநில சாலைப் போக்குவரத்துத் துறைகள் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களைத் தொடங்குகின்றன. ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் நிறுவனங்களின் மையங்களில் பதிவு செய்ய வேண்டும்.
புதிய விதி
அந்த நிறுவனம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதனைக் கொண்டு ஆர்டிஓ அலுவலகத்தில் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு எந்த வித சோதனையும் இன்றி ஆர்டிஓவிடம் இருந்து ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி நான்கு வாரங்கள் அல்லது குறைந்தது 29 மணிநேர பயிற்சியாக இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமத்திற்கு 6 வாரங்கள், 39 மணிநேர பயிற்சி தேவை. 31 மணி நேரம் நடைமுறை.
இதற்கிடையில், ஆர்டிஓ அலுவலகத்தில் கற்றல் உரிமம் எடுத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விதி ஜூன் 1 முதல் அமலாகவுள்ளது.