இனி எளிதாக லைசென்ஸ் பெறலாம்: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு
ஓட்டுநர் உரிமம் பெற ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமென்றால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால்தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்பதே விதியாக உள்ளது.
இதனை எளிமைப்படுத்தும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய நடைமுறை வகுத்துள்ளது.
அதன்படி அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடக்கும் சோதனைகளில் அங்கே இருக்கத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடைமுறை ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.