இந்த 6 விதிகளை மீறினால்...ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்படும்?வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!
இருசக்கர வாகனத்தில் விபத்து இல்லாமல் பயணிக்க சாலை விதிகளை கடைபிடிப்பது அவசியம் குறித்து அறிந்துகொள்ளலாம்.
சாலை விதி
ஜனவரி 1 முதல் ஜனவரி 31, 2025 வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் அனுசரிக்கப்படுகிறது. சாலை விதிகள் என்பது, சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள், பாதசாரிகள், மிதிவண்டி ஓட்டிகள் ஆகியோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளாகும்.
இருசக்கர வாகனத்தில் விபத்து இல்லாமல் பயணிக்கச் சாலை விதிகளை கடைப்பிடிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் சென்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையின் இடது பக்கத்திற்கு மிக அருகில் வாகனத்தை ஓட்ட வேண்டும்.
எதிர்த் திசையில் செல்லும் வாகனங்களைத் தனது வலது பக்கம் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.ஒருவழிச் சாலையில், வாகனம் முந்திச் செல்ல வலது பக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.எதிர்புறமாக வாகனங்களை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.இருவழிச் சாலையில், இடப்புறம் மட்டுமே வாகனத்தைச் செலுத்த வேண்டும்.
ஓட்டுநர் உரிமம்
அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். தலைக்கவசத்தில் முறையாகப் போட வேண்டியது அவசியம்.நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறாமல் சீட் பெல்ட் அணிய வேண்டும். இருசக்கர மற்றும் நான்கு வாகனத்தில் செல்பவர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
அலைபேசி பயன்படுத்திக்கொண்டு வாகனம் ஓட்டுவது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகனத்தை ஓட்டுவது, சரக்கு வண்டியில் பயணிப்பது போன்ற ஆறு விதிகளை மீறினால் அபராதத்துடன் சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.