இனி பேருந்துகளிலும் Smart Card.. ஈசியாக பயணிக்கலாம் - இன்று முதல் சூப்பர் வசதி அறிமுகம்!
சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் ஸ்மார்ட் கார்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை
சென்னையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கு ஸ்மார்ட் கார்டை அன்றாடம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் விதமாக இந்த மூன்று போக்குவரத்து சேவைகளுக்கும் ஒரே பயணச்சீட்டை கொண்டு பயன்படுத்தும் முறையைக் கொண்டு வரத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, மெட்ரோ ரயிலில் "சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் எளிதில் பயணிக்க முடியும்.இதில் தமக்குத் தேவையாகத் தொகையைச் செலுத்தி ரிசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் கார்ட் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்த முடியும்.
ஸ்மார்ட் கார்ட்
அது போலப் பேருந்துகளில் ஸ்மார்ட் கார்ட் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனைப் பல்லவன் பணிமனையில் மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் கார்ட் பயன்படுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
முதல் கட்டமாக 50,000 ஸ்மார்ட் கார்ட் ஸ்டேட் பேங்க் மூலம் கட்டணம் இன்றி வழங்கப்படுகிறது. இன்று முதல் கோயம்பேடு, பிராட்வே பேருந்து நிலையங்களில் வினியோகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.