பள்ளியில் என்ன நடந்தது? கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த சிறுமி விவகாரம்- முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கை!
தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமி பெற்றோருக்கு ஆறுதல் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 4 வயது சிறுமி லியா லட்சுமி எல்கேஜி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி மதிய உணவு இடைவேளையின் போது கழிவறை சென்றுள்ளார்.
அப்போது கழிவுநீர் தொட்டியின் மீது ஏறிய போது இரும்புத் தகடு உடைந்து உள்ளே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்துப் பெற்றோர்கள் பள்ளி வளாகம் முன்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இதில் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ், மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சர் ஆறுதல்
இந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பள்ளியிலிருந்த கழிவு நீர்த் தொட்டியில் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை லியா லக்ஷ்மியின் பெற்றோருக்கும். அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.