வேகமாக சென்ற ரயிலை திடீரென நடுவழியில் நிறுத்திவிட்டு சென்ற ஓட்டுநர் - பயணிகள் கடும் அவதி..!

Coimbatore Kerala Indian Railways
By Thahir Jun 26, 2023 05:37 AM GMT
Report

வேகமாக சென்ற ரயிலை திடீரென நிறுத்திவிட்டு சென்ற ரயில் ஓட்டுநரால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

திடீரென நிறுத்தப்பட்ட ரயில் 

பெங்களூருவின் யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கோவை வழியாக கண்ணுாருக்கு ரயில் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த ரயில் பெங்களூரு எஸ்வந்த்பூரில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவை ரயில் நிலையத்துக்கு வந்தது அங்கு 1/2 மணி நேரம் ரயில் நின்றுள்ளது.

driver stopped the train suddenly in the middle

பின்னர் அங்கிருந்து ரயில் புறப்பட்டு பாலக்காட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது வாளையார் ரயில்வே ஸ்டேசனில் காலை 6 மணிக்கு திடீரென நின்றுள்ளது.

அந்த ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்த அனுமதியில்லை ஆனால் ரயில் சிக்னலுக்காக நிறுத்தப்பட்டு இருக்கலாம் என நினைத்து பயணிகள் காத்திருந்தனர்.

ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு சென்ற ஓட்டுநர் 

இந்த நிலையில் ரயில் நீண்ட நேரமாகியும் ரயில் புறப்படாததால் சந்தேகம் அடைந்த பயணிகள் என்ன ஆச்சு என்று அறிந்து கொள்ள ரயில் என்ஜினை நோக்கி சென்று பார்த்துள்ளனர் அப்போது அங்கு லோகோ பைலட்    (ஒட்டுநர்) இல்லை.

பின்னர் ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஏன் ரயில் நிற்கிறது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் இந்த ரயில் நிலையத்தில் ரயில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறியுள்ளார்.

driver stopped the train suddenly in the middle

லோகோ பைலட் எங்கே போனார் என்று தெரியாமல் தவித்த ரயில் பயணிகள் பாலக்காடு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து ரயில் நிலையத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது ரயில் ஓட்டுநருக்கு உடல் நிலை சரியில்லாததால் ரயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்றது தெரியவந்தது.

மாற்று ஓட்டுநர் வரவழைக்கப்பட்டு ரயில் இயக்கம் 

பின்னர் சுமார் 2.5 மணி நேரத்திற்கு பிறகு பாலக்காட்டில் இருந்து மற்றொரு என்ஜின் டிரைவர் வரவழைக்கப்பட்டார்.

driver stopped the train suddenly in the middle

இதையடுத்து 2.5 மணி நேரம் தாதமதமாக காலை 8.30 மணிக்கு வாளையார் ரயில் நிரையத்தில் இருந்து ரயில் பாலக்காடு நோக்கி புறப்பட்டு சென்றது.

இதனால் அவ்வழியாக கேரளா நோக்கி செல்லவிருந்த ரயில்கள் தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.