வயிற்றில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு..நொடியில் ஓட்டுநர் செய்த செயல் - பிழைத்த உயிர்கள்!
வயிற்றில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் ஓட்டுநர் ஒருவர் வாகனத்தை இயக்கம் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பிஹார்
பிஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் சிங். இவர் வாடகை ஜீப் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் . இந்த நிலையில் நேற்று ஜாவூன் கிராமத்திலிருந்து 15 பயணிகளைத் தனது ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.
அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த சந்தோஷ் சிங் ஜீப்பை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சந்தோஷ் சிங்கின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.
திரைப்பட பாணியில் துப்பாக்கிக் குண்டால் காயமடைந்த சந்தோஷ் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி பாதுகாப்பான இடத்துக்கு வந்து வண்டியை நிறுத்தினார் .இதனைக் கண்ட அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
ஓட்டுநர்
பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர் .உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் சந்தோஷ் சிங்கை,மீட்டு சிகிக்சைக்காகக் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரது உடலிலிருந்து குண்டு அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்