சிறுமிக்கு தாலி கட்டி குடும்பம் நடத்திய டிரைவர் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Tamil nadu Thoothukudi Marriage
By Jiyath Apr 23, 2024 06:59 AM GMT
Report

சிறுமிக்கு தாலி கட்டி குடும்பம் நடத்திய நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

தாலி கட்டிய நபர் 

தூத்துக்குடி மாவட்டம் சக்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவர் மினிபஸ் டிரைவராகவும், கூலித் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 12-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறுமிக்கு தாலி கட்டி குடும்பம் நடத்திய டிரைவர் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | Driver Jailed For Married The Teenage Girl

இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று மஞ்சள் கயிறை கழுத்தில் கட்டியுள்ளார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

பிறந்த நாள் கேக் சாப்பிட்டு பலியான 10 வயது சிறுமி - வெளியான அதிர்ச்சி காரணம்!

பிறந்த நாள் கேக் சாப்பிட்டு பலியான 10 வயது சிறுமி - வெளியான அதிர்ச்சி காரணம்!

நீதிமன்றம் அதிரடி 

இது குறித்து அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் அப்போதைய அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

சிறுமிக்கு தாலி கட்டி குடும்பம் நடத்திய டிரைவர் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | Driver Jailed For Married The Teenage Girl

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மாதவராமானுஜம் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.