மாணவியை அடித்து, கடித்த ஓட்டுநர் - பேருந்தில் வெறிச்செயல்!

Viral Video United States of America Child Abuse
By Sumathi Oct 29, 2022 06:28 AM GMT
Report

பேருந்தில், பெண் ஓட்டுநர் ஒருவர் மாணவியை அடித்து உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

12 வயது சிறுமி

அமெரிக்கா, டெட்ராய்ட் பகுதியில் பள்ளி பேருந்தில் மாணவர்கள் சிலர் பயணித்துள்ளனர். அப்போது, ஒரு மாணவரை இறக்க பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அதே இடத்தில் மற்றொரு 12 வயது சிறுமி ஏறி உள்ளார். தொடர்ந்து, தனது சகோதரரிடம் ஜன்னல் வழியாக பேசிக் கொண்டிருந்துள்ளார்.

மாணவியை அடித்து, கடித்த ஓட்டுநர் - பேருந்தில் வெறிச்செயல்! | Driver Beats Bites Student On Bus Shocking Video

அப்போது பெண் ஓட்டுநர் அந்த மாணவியை உட்காரச் சொல்லி தோளில் வேகமாக தட்டி இருக்கிறார். மேலும் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஆனால் சிறுமி அதனை கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் ஓட்டுநர் சிறுமியை அடித்து, உதைத்து தாக்கியுள்ளார்.

ஓட்டுநர் தாக்குதல்

மேலும் முகங்களில் கடித்தும் உள்ளார். இதனால், சிறுமிக்கு பெரும் காயம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து பேருந்தில் இருந்த மாணவர்கள் வெளியேறி உள்ளனர். பின் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுமியை மீட்டு மருத்துவமனையி அனுமதித்துள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகம் அந்தப் பெண் ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.