காப்பி அடித்து சிக்கி கொண்ட மருத்துவ மாணவி - மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

suicide student kanjipuram saveetha college
By Anupriyamkumaresan Jul 24, 2021 06:30 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

காஞ்சிபுரம் அருகே உள்ள சவீதா மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காப்பி அடித்து சிக்கி கொண்ட மருத்துவ மாணவி - மாடியில் இருந்து குதித்து தற்கொலை! | Kanjipuram Saveetha College Student Suicide

சென்னை அம்பத்தூர் அடுத்த புதூர் சிவசண்முகம் சாலையை சேர்ந்த சோனாலி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்த கல்லூரியில் தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற தேர்வில் சோனாலி செல்போனை வைத்து காப்பி அடித்துள்ளார்.

காப்பி அடித்து சிக்கி கொண்ட மருத்துவ மாணவி - மாடியில் இருந்து குதித்து தற்கொலை! | Kanjipuram Saveetha College Student Suicide

இதனை கண்டுபிடித்த ஆசிரியர், கையும் களவுமாக அவரை மடக்கிபிடித்து, அவரது தந்தையை கல்லூரியில் அழைத்து கண்டித்துள்ளார். இனிமேல் இதுபோல் நடக்காது என மாணவி உறுதியாக கடிதம் எழுதிக் கொடுத்ததன் பேரில் மீண்டும் நேற்று நேற்றைய தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தேர்விலும், செல்போனை வைத்து சோனாலி காப்பி அடித்து கொண்டிருந்திருக்கிறார். இதில் ஆத்திரமான ஆசிரியை செல்போனையும் பேப்பரையும் பிடுங்கிவிட்டு மாணவியை ஓரமாக உட்கார சொல்லியிருக்கிறார்.

காப்பி அடித்து சிக்கி கொண்ட மருத்துவ மாணவி - மாடியில் இருந்து குதித்து தற்கொலை! | Kanjipuram Saveetha College Student Suicide

இதனால் மன வேதனை அடைந்த சோனாலி, தந்தையிடம் சொல்லிவிடுவார்களோ என அஞ்சி, மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சோனாலி, சம்பவ இடத்திலேயே ரத்தம் கசிந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சோனாலியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.