த்ரிஷ்யம் 2 படத்தை பாராட்டிய அஸ்வின்: நன்றி தெரிவித்த மோகன்லால்
ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால்- மீனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். இதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது, அமைசான் பிரைமில் வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் த்ரிஷ்யம் 2 படத்தை பாராட்டிய தமிழக வீரர் அஸ்வின், த்ரிஷ்யம் 2 படத்தில் நீதிமன்றக் காட்சியில் அந்தத் திருப்பத்தை மோகன்லால் உருவாக்கியபோது நான் மிகவும் ரசித்தேன்.
நீங்கள் பார்க்கவில்லையென்றால் த்ரிஷ்யம் 1-லிருந்து மீண்டும் ஆரம்பியுங்கள். அபாரம் என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள மோகன்லால், கிரிக்கெட் ஆட்டங்களினால் பரபரப்பான இச்சூழலில் நேரம் ஒதுக்கி த்ரிஷ்யம் 2 படத்தை பார்த்ததற்கு நனிற, உங்களுடைய ஆட்டங்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.