டீ குடிச்சா ஆயுள் கூடுமாம்... ஆய்வில் கிடைத்த அற்புத தகவல்!

Healthy Food Recipes Green Tea
By Sumathi Sep 01, 2022 08:20 AM GMT
Report

அதிக அளவில் டீ குடிப்பதால் ஆயுள் அதிகரிப்பதாக ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேநீர்

தேநீர் என்பது பலரது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்கப்படாத உண்மை. இது பல சமயங்களில் வாழ்க்கையை அடுத்த நொடிக்கு நகர்த்தி செல்கிறது என்றே கூறலாம். ஏனெனில் இதனால் மனம் புத்துணர்வு பெறுகிறோம்.

டீ குடிச்சா ஆயுள் கூடுமாம்... ஆய்வில் கிடைத்த அற்புத தகவல்! | Drinking Tea Increases Longevity Information

மேலும் நம்மை சுறு சுறுப்பாகவும் மாற்றுகிறது. இந்நிலையில், அதிக அளவு தேநீர் உட்கொள்வதால் ஏற்படும் நன்மை மற்றும் தீமை குறித்து ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அங்குள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆயுளை கூட்டும் 

அதன் முடிவில், அதிகளவு தேயிலை அருந்துவது இறப்பின் அபாயத்தை குறைத்து ஆயுளை கூட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை ஒப்பிடும்போது 2 அல்லது 3 கப் தேநீர் அருந்துபவர்களுக்கு 9-3 வரை இறப்பு சதவீதம் குறைவாக இருப்பதாக ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டீ குடிச்சா ஆயுள் கூடுமாம்... ஆய்வில் கிடைத்த அற்புத தகவல்! | Drinking Tea Increases Longevity Information

இந்த ஆய்வில் 40 முதல் 69 வயதுக்குட்பட்ட 4,98,043 ஆண்களும் பெண்களும் பங்கேற்றுள்ளனர். அதில் 89 சதவீதம் பேர் பிளாக் டீ குடிப்பவர்கள் என தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆய்வு கிரீன் டீ அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை ஆராய்வதிலேயே கவனம் செலுத்துகிறது.

ஆய்வின் தகவல்

இருப்பினும் தேநீர் அதிக அளவு அருந்துவதால் குறிப்பாக பிளாக் டீ அதிக அளவில் உட்கொள்ளப்படுவதால் மக்களின் இறப்பு அதிகரிக்கிறது என அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தேநீர், பால் மற்றும் காபி அருந்துவது மரபணு வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதில்லை எனவும் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.