டீ குடிக்கும்போது சாப்பிடகூடாத 5 உணவுகள் - இவ்வளவு பிரச்சனைகள் இருக்கா?
Healthy Food Recipes
By Petchi Avudaiappan
பொதுவாக நம்மில் பலருக்கும் டீ அல்லது காபி குடிக்காமல் அன்றைய நாள் என்பது சிறப்பாக தொடங்காது. வீட்டிலோ அல்லது கடைகளிலோ டீ, காபி அருந்தினாலும் கூட எதோ ஒரு ஸ்நாக்ஸ் எடுத்து சாப்பிடுவது நமது வழக்கமாக இருக்கும்.
இத்தகைய டீ,காபி போன்றவை உடலுக்கு உற்சாகம் கொடுக்கும் என கூறப்பட்டாலும், அதனோடு சேர்த்து சாப்பிடப்படும் தின்பண்டங்கள் நிச்சயம் நம் உடல் நலத்துக்கு கோளாறை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
- இத்தகைய பானங்களை குடிக்கும் போது மைதா அல்லது கடலை மாவில் செய்யப்பட்ட தின்பண்டங்களான பஜ்ஜி,போண்டா, போன்ற பலகாரங்களை சேர்த்து சாப்பிடுவது செரிமானம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
- சிலர் டயட்டில் இருக்கும் போது பச்சைக் காய்கறிகளை உட்கொள்வது வழக்கம். அவற்றை சாப்பிட்டு முடித்தபின் டீ குடிக்கக்கூடாது. காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல் உறிஞ்சுக்கொள்ளும் செயல்திறனை டீ பாதிக்கிறது.
- டீ தூளும், எலுமிச்சை சாறும் ஒன்று சேரும் போது வயிற்றில் அசிடிட்டி, உப்புசம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் அடிக்கடி லெமன் டீ குடிக்காதீர்கள்.
- இதேபோல் அதிகம் மஞ்சள் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை சாப்பிடும் போது டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும். இது நமது ஜீரண சக்தியை பாதித்து ஆசிட் ரிஃப்லக்ஸ் பிரச்சினையை ஏற்படுத்தும்.
- டீயில் உள்ள டெனனின் என்ற வேதிப்பொருள் நட்ஸ் வகைகளில் மிகுதியாக உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சிக் கொள்ள விடாமல் தடுப்பதால் இந்த காம்போவை ட்ரை செய்யாதீர்கள்.