ஆண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீரக கல் - பீர் குடிப்பதனால் தான் இவ்வளவுமா?
பீர் குடிப்பது சிறுநீரக கற்கள் உருவாகும் ஆபத்தை விளைவிக்கிறது.
பீர்
பீர் குடிப்பது உடலில் கடுமையான நீரிழப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. குறிப்பாக, கோடை காலத்தில் இது சிறுநீரக கற்கள் உருவாகும் ஆபத்தை விளைவிக்கிறது.
நீண்டகாலமாக பீர் குடிப்பதால் உடலில் ஆக்ஸலேட் அதிகரிக்கும். பீரில் கலோரிகள் அதிகம் என்பதால் உடல் எடை அதிகரிக்கும். சிறுநீரக கற்கள் உருவாவதற்கு இது முக்கிய காரணியாக உள்ளது.
சிறுநீரக பாதிப்பு
பீர் குடிப்பதால் சிறுநீரகத்தில் உள்ள சிறிய கற்கள் வெளியேறினாலும் கூட, இதை குடிப்பதால் கல்லீரலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு அதைவிட பெரிது. சிறுநீர்க்குழாயில் சிறு கற்கள் சிக்கிக் கொண்டிருந்தால், பெரும்பாலான சமயங்களில் 15 நாட்களுக்குள்ளாக தானாகவே வெளியேறிவிடும்.
அப்படி வெளியேறாவிட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
தண்ணீர், சிட்ரஸ் பழ ஜூஸ், இளநீர் போன்றவற்றை அருந்துவதன் மூலம் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.