குடிப்பதற்கு பணம் தரவில்லை.. தன் பாட்டியையே கொடூரமாக வெட்டி கொலை செய்த பேரன்

dead Vellore brutally grandson
By Jon Mar 30, 2021 01:09 PM GMT
Report

காட்பாடியில் குடிப்பதற்கு பணம் தராததால் பாட்டியை கொடூரமாக வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு திருவள்ளுவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (60). இவருடைய பேரன் அஜித் (22). அஜித்திற்கு குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு பாட்டியை தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடிக்கு சண்டையும் வந்துள்ளது. சம்பவத்தன்று வழக்கம் போல் அஜித் பாட்டியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித், நேற்று நள்ளிரவு இரவு, பாட்டி சாந்தி கத்தியால் கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்தார். கொலை செய்து விட்டு அஜித் வீட்டை விட்டு தலைமறைவாகிவிட்டார்.

 குடிப்பதற்கு பணம் தரவில்லை.. தன் பாட்டியையே கொடூரமாக வெட்டி கொலை செய்த பேரன் | Drink Grandson Brutally Hacked Grandmother Death

பாட்டி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டார் உள்ளே சென்று பார்த்தபோது பாட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இது குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி போலீசார் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான அஜித்தை தீவிரமாக தேடி வருகின்றனர். குடிக்கு பணம் தராததால் பாட்டியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.