மாற்றுத் திறனாளியின் வயிற்றில் கண்ணாடி பாட்டில்; அதிர்ச்சி பின்னணி - மிரண்ட மருத்துவர்கள்!
மாற்றுத்திறனாளியின் வயிற்றுக்குள் குளிர்பான பாட்டில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளிர்பான பாட்டில்
புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி(45). கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடுமையான வயிற்றுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு பரிசோதித்ததில் மலக்குடலில் குளிர்பான கண்ணாடி பாட்டில் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர்.
மருத்துவர்களுக்கு பாராட்டு
மலக்குடலில் 21 செ.மீ உயரம், 10 செ.மீ வட்டம் கொண்ட பச்சைக் கலர் குளிர்பான பாட்டில் இருந்ததால் அப்பகுதி கிழிந்து சேதமடைந்தது. இதற்கு மாற்றாகச் செயற்கையாக மலக்குடல் பகுதி பொருத்தியுள்ளனர்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளி இளைஞரை யாரோ கட்டாயப்படுத்தி அவரது மலவாய் வழியாக இந்த பாட்டிலை உள்ளே அழுத்தி இருக்க வேண்டும். தற்போது தீவிர சிகிச்சையில் இருப்பதாலும் வாய் பேச முடியாததாலும் அவர் இது பற்றி ஏதும் சொல்ல முடியாமல் உள்ளார்.
உறவினர்களுக்கும் இது குறித்து எதுவும் தெரியவில்லை. அவராக அந்த அளவு பாட்டிலை உள்ளே அனுப்புவது கடினம்.
எனவே இக்கொடூரச் செயலை செய்தவர்களை போலீஸார் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.