நள்ளிரவில் Spider Man உடையில் அலப்பறை.. இளைஞர் சொன்ன காரணம் - மிரண்டுபோன போலீசார்!
ஸ்பைடர்மேன் உடையில் இளைஞர் ஒருவர் கட்டிடங்களில் ஏறித்திரிந்துள்ளார்.
ஸ்பைடர்மேன்
சென்னை அண்ணா சாலையில் நேற்றிரவு ஸ்பைடர்மேன் உடை அணிந்து கட்டிடங்களில் இளைஞர் ஒருவர் ஏறித்திரிந்துள்ளார். இதனைக் கண்டு அந்த வழியாகச் சென்ற பொது மக்கள் வியப்புடன் பார்த்தனர்.ஒரு கட்டத்தில் உயரத்தில் உள்ள சுவர் மீது சாகசத்தில் ஈடுபட்டார்.
கொஞ்ச நேரத்தில் இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து காவல்துறைக்குப் புகார் கொடுத்தனர்.தகவலின் பேரில் உடனடியாக அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஸ்பைடர் மேன் உடையில் சாகசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞரைக் கீழே இறக்கினர்.
அப்போது மாஸ்கை கழற்றும்படி காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் அந்த இளைஞர் கடைசி வரை அந்த நபர் மாஸ்கை அகற்றவில்லை. இதனால் காவல் துறையினர் கோபமடைந்தனர். அதன்பிறகு அந்த நபர் மாஸ்கை கழட்டினார்.
இளைஞர்
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அண்ணா சாலையைச் சேர்ந்த சையத் அக்பர் அலி என்பது தெரியவந்தது. இவர் ஸ்வீட் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களாகக் கடையில் வியாபாரம் சரியாக இல்லை என்று கூறியுள்ளார்.
இதற்காகக் கடை விளம்பரத்திற்காக ஸ்பைடர் மேன் உடையில் கட்டிடத்தின் மீது ஏறி கவனத்தை ஈர்க்க இப்படிச் செய்ததாகக் கூறினார். பின்னர் காவல்துறையினர் சையத் அக்பர் அலி விசாரணைக்கு ஆஜராகக் கூறி எழுதி வாங்கிக் கொண்டு அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.