அமைச்சர் உதயநிதி உருவ படத்தை வெறும் 8 நிமிடங்களில் வரைந்த ஓவிய ஆசிரியர் - குவியும் பாராட்டுக்கள்!
ஓவிய ஆசிரியர் ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை 8 நிமிடங்களில் வரைந்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, பிரஷ் ஏதும் பயன்படுத்தாமல், உதயநிதி ஸ்டாலின் படம் வரைய அவர் இருக்கும் திமுக கட்சி சின்னமான "உதயசூரியன் சின்னத்தாலேயே" திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வரைந்தார்.
முதல் அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், பல தமிழ் சினிமாக்களில் நடித்து பிரபலமானவர். 2021 ஆம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக எம்எல்ஏ ஆனார், திமுக கட்சியில் இளைஞர் அணி செயலாளராக உள்ளார், 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் அவர் திமுக வேட்பாளருக்காக மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிரஷ் ஏதும் பயன்படுத்தாமல், உதயநிதி ஸ்டாலின் அவர் இருக்கும் திமுக கட்சி சின்னமான "உதயசூரியன் சின்னம் " நீர் வண்ணத்தில் உதயசூரியன் சின்னம் கொண்ட அட்டையை நீர் வண்ணத்தில் தொட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் படத்தை அவருடைய சின்னமான "உதயசூரியன் சின்னத்தாலேயே" எட்டு நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் வரைந்தார்.
இந்த ஓவியத்தைப் பார்த்த பொதுமக்கள், திமுக நிர்வாகிகள்
"திமுக கட்சிக்காரரான உதயநிதி ஸ்டாலின்" படத்தை அவர் இருக்கும் கட்சி சின்னமான "உதயசூரியன் சின்னத்தாலேயே" வரைந்தது அற்புதம் என்று ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களை பாராட்டினார்கள்.