டிராவிட் மகன் இந்திய அணியிலிருந்து அதிரடி நீக்கம் - என்ன காரணம்?
சமீத் டிராவிட் இந்திய அண்டர் 19 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சமீத் டிராவிட்
இந்திய அணியின் அசைக்கமுடியாத பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். இவரது மகன் சமீத் டிராவிட். உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வந்தார்.
இதனால் அண்டர் 19 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சமித் டிராவிட் இடம்பெற்றார்.
அணியில் நீக்கம்
இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 தொடரிலாவது சமித் டிராவிட் அறிமுகவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் ஒருநாள் போட்டியில் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் சமீத் டிராவிட் பிளேயிங் லெவனில் இல்லை.
இந்நிலையில், சமித் டிராவிட் இந்திய 19 அணியில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் மாற்றப்பட்டு ரோகித் ராஜாவாத் என்ற வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற மகாராஜா டி20 தொடரில் சமித் டிராவிட் பெரிய அளவில் சாதிக்கவில்லை.
கடைசியாக அவர் விளையாடிய ஏழு இன்னிங்ஸில் அதிகபட்சமாக அவர் 33 ரன்கள் தான் அடித்திருந்தார்.
தற்போது சமித் டிராவிட் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டார்? என ரசிகர்கள் குழம்பி உள்ளனர். இது குறித்து பிசிசிஐ எந்த ஒரு விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.