15வது குடியரசுத் தலைவராக பதவியேற்கிறார் திரெளபதி முர்மு!
நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்கிறார். இதற்காக நாடாளுமன்றத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திரௌபதி முர்மு
இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்கிறார். காலை 10.15 மணியளவில் நடைபெறும் விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

நாடாளுமன்றம் மைய வளாகத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் நாட்டின் முதல் குடிமகளாக பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
பதவியேற்பு
21 குண்டுகள் முழங்க பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சி முடிந்தவுடன் நாட்டு மக்களிடையே திரௌபதி முர்மு உரையாற்றுவார் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ,பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா , மத்திய அமைச்சர்கள் ,ஆளுநர்கள் ,மாநில முதல்வர்கள், மக்களவை எம்பிக்கள், முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பதவி ஏற்பு விழா முடிந்ததும் குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்லும் திரவுபதி முர்முவுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.