இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
நாட்டின் 15 வது குடியரசுத்தலைவராகும் திரௌபதி முர்மு , இந்தியாவின் முதல் பழங்குடியினக் குடியரசுத்தலைவர் எனும் பெயரைப் பெறுவார். அத்துடன் இரண்டாவது பெண் குடியரசுத்தலைவர் எனும் பெருமையும் முர்முவுக்குக் கிடைக்கும்.
திரெளபதி முர்மு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த முர்மு, தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அதன் பிறகு மாநில அரசியலில் நுழைந்த அவர், 2000, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வென்றார்.
சொந்த மாவட்டத்தில் மயூர்பஞ்ச் தொகுதியிலேயே அவர் இரண்டு முறையும் எம்.எல்.ஏ.ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒடிசாவில் 2000ஆவது ஆண்டில் பா.ஜ.க.- பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, போக்குவரத்து, வர்த்தகம் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவியேற்றார், முர்மு. பின்னர், மீன்வளம், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளை கவனித்தார்.
2009இல் பா.ஜ.க.நெருக்கடியாக இருந்த சமயத்தில் திரௌபதி முர்மு வெற்றிபெற்றார் ஜார்க்கண்டு மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, அதன் முதல் பெண் ஆளுநராகக் கடந்த 2015ஆம் ஆண்டில் முர்மு பதவியேற்றார்.

தனது சொந்த வாழ்க்கையில் தனது கணவர் சியாம் சரணையும் இரண்டு மகன்களையும் பறிகொடுத்துள்ளார் , ஆனாலும் தனது அரசியல் பாதையில் முன்னேறியுள்ளார்.
முன்னதாக, சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன், 1997ஆம் ஆண்டில் இராய்ரங்பூர் நகர் ஊராட்சியில் மன்ற உறுப்பினராகவும் அவர் பதவிவகித்துள்ளார்.