ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு - லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி

India Queen Elizabeth II Draupadi Murmu England
By Sumathi Sep 17, 2022 12:52 PM GMT
Report

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் புறப்பட்டார்.

இறுதிச் சடங்கு 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் கடந்த 8-ந் தேதி காலமானார். 96 வயதான அவருக்கு ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது இறுதி சடங்கு வருகிற 19ஆம் தேதி லண்டனில் நடைபெற இருக்கிறது.

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு - லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி | Draupadi Murmu Last Tribute To Queen Elizabeth

அவரது இறுதிச் சடங்கில் உலக தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். லண்டனுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, பிரிட்டிஷ் எம்ஐ5 மற்றும் எம்ஐ6 உளவுத்துறை நிறுவனங்கள், லண்டனின் பெருநகர காவல்துறை மற்றும் ரகசிய சேவை ஆகியவை இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரௌபதி முர்மு பங்கேற்பு

சுமார் 7.5 லட்சம் பேர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடும் குளிரில், 16 மணி நேரம் காத்திருந்து மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு, ராணுவத்தினர் அணிவகுக்க அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடன் வர ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.

லண்டனில் ஊர்வலம் செல்லும்போது, வீதிகளில் நின்று பொதுமக்கள் அதைப் பார்க்க முடியும். லண்டனில் அரச குடும்ப பூங்காக்களில், இந்த ஊர்வல நிகழ்ச்சி பெரிய திரையில் ஒளிபரப்பப்பட உள்ளது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டன் புறப்பட்டார். 3 நாள் பயணமாக லண்டன் செல்லும் திரௌபதி முர்மு 19 ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலியை செலுத்துவார்.