பட்டியலின மக்கள் வழிப்பட எதிர்ப்பு - திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல்!
திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
வலுக்கும் எதிர்ப்பு
விழுப்புரம், மேல்பாதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு இந்த ஆண்டு திருவிழாவின்போது சென்ற தலித் இளைஞர் கதிரவன் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும், கோவிலில் வழிபடுவதற்கு இந்து ஆதிதிராவிடர் சமூகத்தினரை அனுமதிக்காதது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு சீல்
இந்நிலையில், திரௌபதி அம்மன் கோவிலுக்கு வருவாய் கோட்டாசியர் சீல் வைத்துள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், பட்டியலின மக்களை கோவிலுக்கு அனுமதிக்க முடியாது என்று மாற்று சமூகத்தினர் கூறிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அங்கு வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.