பட்டியலின சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுப்பு - 2 பேர் கைது

Tamil nadu Viral Video Tamil Nadu Police
By Thahir Sep 17, 2022 07:28 AM GMT
Report

தென்காசியில் பட்டியலின சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுப்பு தெரிவித்த கடை உரிமையாளர் மகேஸ்வரன் மற்றும் ராமசந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தீண்டாமை - இருவர் கைது 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் என்ற கிராமத்தில் பட்டியலின சிறுவர்கள் அங்குள்ள பெட்டிக்கடையில் தின்பண்டம் வாங்க சென்ற போது கடை உரிமையாளர் மகேஸ்வரன், அந்த சிறுவர்களிடம் ஊர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் உங்களுக்கு தின்பண்டம் தர முடியாது எனக் கூறி இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் போய் சொல்லுங்கள் என்று கூறினார்.

பட்டியலின சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுப்பு - 2 பேர் கைது | Refusal To Provide Snacks To Children 2 Arrested

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், மாவட்ட ஆட்சியர் கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கோட்டாச்சியர் சுப்புலட்சுமி கடையை பூட்டி சீல் வைத்தார்.

இந்த நிலையில் கடை உரிமையாளர் மகேஸ்வரன், மற்றும் ராமசந்திரமூர்த்தி ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.